திருச்சி மாநகராட்சி 65வார்டு பகுதிகளிலும் வார்டு சிறப்பு கூட்டம்: 54வது வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார்
திருச்சி மாநகராட்சி
65வார்டு பகுதிகளிலும் வார்டு சிறப்பு கூட்டம்:
54வது வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
திருச்சி மாநகராட்சி 65வார்டு பகுதிகளிலும் வார்டு சிறப்பு கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் புஷ்பராஜ் மண்டலம்5 ,வார்டு எண் 54 பெரிய மிளகு பாறை பல்நோக்கு சேவை மையத்தில் வார்டு பகுதி சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் குடியிருப்பவர் நல சங்கம் ,அப்பகுதி மக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு கவுன்சிலர் புஷ்பராஜ் உடன் கலந்துரையாடி அடிப்படை வசதிகளை குறித்து கேட்டு அறிந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். செயற்பொறியாளர் பாவா பக்ருதீன் உடன் இருந்தார் .
மேலும் 65 வார்டு பகுதியில் மேயர் , துணை மேயர்,மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் மாநகராட்சி அலுவலர் கூட்டணராக கொண்டு வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் , குடியிருப்போர் நல சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்புடன் வார்டு அளவிலான கோரிக்கைகள் செயல்படுத்தும் விதமாக சிறப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டு குறைகளை மனுக்களாக அளித்தனர் .

