திருச்சியில்
பள்ளி மாணவர்களுக்கு
கஞ்சா விற்ற 21 வயது பெண் உட்பட 3 பேர் கைது .
போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர் காலனி 8 -வது தெரு பகுதியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகாமையில் மேல கல்கண்டார்கோட்டை அர்ஜுனன் நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்கிற முகமது ரஃபீக் (வயது 38) என்பவர் கஞ்சா விற்பனை செய்வதாக பொன்மலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் ஹமீலா பானு மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர் .பின்னர் சிவகுமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இவர் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பின்னர் சிவகுமாரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதேபோன்று அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
எஸ்.ஐ.டி மைதானம் கேட் பகுதியில் பள்ளி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த அரியமங்கலம் கணபதி நகர் 3 -வது தெரு பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் மகள் ஜெயஸ்ரீ (வயது 21), திருச்சி பாலக்கரை எடத்தெரு
பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (வயது 27 )ஆகிய இரண்டு பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த அகல்யா (வயது 22) அரியமங்கலம் மலையப்பன் நகர் அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்த மதன் என்கிற குட்செட் மதன் (வயது 41) ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

