Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தீபாவளி அன்று ஆட்டுக்கறி,சிக்கன் இங்கு , வட மாநிலத்தினர் சுத்த சைவம் காரணம் …

0

'- Advertisement -

தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?

தீபாவளி பண்டிகைக்கு தென்னிந்தியாவிலும் வடஇந்தியாவிலும் கடைபிடிக்கப்படும் முறைகள் வேறு வேறாக இருப்பது ஏன்? எதற்காக ஆட்டுக்கறி எடுக்கின்றனர்? என்பது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோமா ?

 

தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கிய பண்டிகையாக தீபாவளி உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தம் புது ஆடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்புகளை பரிமாறி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள்.

 

தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகை நரகாசுரனை வதம் செய்த நாளை கொண்டாடுவதாக கூறப்படுகிறது. நரகாசுரன் இறக்கும் முன்பாக, கொல்லப்பட்ட தினத்தை வண்ண விளக்குகளோடு கொண்டாட வேண்டுமென கேட்டதாகவும், அதன்படியே அந்த தினம் வண்ண விளக்குகள், வானவேடிக்கைகளோடு தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுவதாகவும் நம்பப்படுகிறது.

 

அதே நேரத்தில், 19ஆம் நூற்றாண்டு வரை தீபாவளி குறித்த குறிப்புகள் தமிழ் வரலாற்றில் இல்லை என்பதே வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தீபாவளி பண்டிகை, விஜயநகர மன்னர்களின் காலத்தில் தெலுங்கு பிராமணர் வழியாக தமிழ்நாட்டிற்கு வந்த திருவிழா என்ற வாதமும் வைக்கப்படுகிறது.

 

அதேபோல், வடஇந்தியாவில் தீபாவளி பண்டிகை ராமாயணத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அதாவது, ராமாயணத்தில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் தங்கள் வனவாசத்தை நிறைவு செய்துவிட்டு அயோத்திக்கு மீண்டும் திரும்பும் தினம்தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. ராவணனை வீழ்த்தி, சீதையை மீட்டு, அயோத்திக்கு ராமர் திரும்பும் நாளை, தீமையை வென்று நன்மையை அடைந்த, அதாவது வெற்றி தினத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

 

தங்கள் அரசன் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரை வரவேற்க அயோத்தி மக்கள் வீடுகளை அலங்கரித்து, வாசலில் விளக்கேற்றினார்கள். இதையே இப்போது தீபாவளி பண்டிகையாக கொண்டாடுவோர் வீடுகளில் விளக்கேற்றுகிறார்கள் என்று கருதப்படுகிறது.

 

ஆட்டுக்கறி எடுப்பது ஏன்?

 

இப்படி நாடு முழுக்க பல்வேறு காரணங்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல், தென்னிந்தியாவில் தீபாவளி என்றாலே பெரும்பாலும் அசைவ உணவு நிச்சயம் மதியம் இடம் பெற்று இருக்கும். காலையில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு பலகாரங்களை சாப்பிட்ட பிறகு, மதியம் ஆட்டுக்கறி, சிக்கன் என அசைவ உணவுடன் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.

 

ஆனால், வடஇந்தியாவில் மறந்தும் தீபாவளி நாளில் அசைவ உணவை தொடமாட்டார்கள். ஏனென்றால், மேலே சொன்ன காரணம்தான். அதாவது வடஇந்தியாவில் தீபாவளி பண்டிகை புனித நாளாக கருதப்படுவதால், இந்த நாளில் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள் எனக் கூறப்படுகிறது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.