தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் மழை பாதிப்பு ஏற்பட்டால் மக்களை தங்க வைக்க நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டார். அதன் பிறகு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு அதிக மழை காரணமாக விடுமுறை விடுவதாக இருந்தால் அது தொடர்பான அறிவிப்பையும் இரவுக்குள் மாவட்ட ஆட்சியர்கள் அறிவிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.