நாளை இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை புத்தாடை அணிந்து , சிறப்பாக கொண்டாட உள்ள நிலையில் சாலையோர உள்ள பொதுமக்கள் புத்தாடை அணிந்து தீபாவளி கொண்டாட முடியாத நிலையை அறிந்த
திருச்சியின் பிரபல தொழிலதிபரும் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் மேற்கு மாவட்ட செயலாளருமான அன்னை ஆண்டனி திருச்சி மாநகரில் சாலையோரம் தங்கி உள்ள ஏழை எளிய சுமார் 300க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு ( ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக ) வேஷ்டி சேலை , இனிப்பு பலகாரங்கள் அன்பளிப்பாக அளித்து அவர்களும் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாட வாழ்த்தி வழங்கினார்.
இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு ஒரு கிறிஸ்தவ இயக்கத்தை சேர்ந்தவர் நலத்திட்டங்கள் வழங்கியதை அனைவரும் பாராட்டி வருகின்றனர் .