திருச்சியின் மையப்பகுதியில் உள்ள பெண்கள் மத்திய சிறையை மாற்றி காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும். சட்டசபையில் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ பேச்சு.
திருச்சியின் மையப்பகுதியில் உள்ள
பெண்கள் மத்திய சிறையை மாற்றி காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்
சட்டசபையில் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ பேச்சு.
திருச்சியின் மையப்பகுதியில் உள்ள பெண்கள் மத்திய சிறைச்சாலையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சட்டசபையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் பேசினார்.
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் இன்று பேசியதாவது:-
திருச்சியின் மையப் பகுதியான பாலக்கரையில்
மகளிருக்கான மத்திய சிறைச்சாலை உள்ளது.
நமது அறிவிப்பின்படி இந்த சிறைச்சாலையை மாநகருக்கு வெளியே
கொண்டு சென்று விட்டு அந்த பகுதியை காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்வதாக
அறிவித்திருந்தோம் .
அந்த அறிவிப்பு எந்த நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்து
சிறைத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில்,
இந்த சிறைச்சாலையை தனி இடத்துக்கு கொண்டு செல்ல இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. கலெக்டரிடமும் கேட்டிருக்கின்றோம்.
இடம் கிடைத்தவுடன்
வேறு இடத்துக்கு மாற்றி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.