திருச்சி, தந்தை பெரியார் அரசு கல்லூரியில் குருதிக்கொடை முகாம்
திருச்சிராப்பள்ளி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெடரல் வங்கி மற்றும் யூத் ரெட் கிராஸ் அமைப்பும் இணைந்து குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் கா. அங்கம்மாள் தலைமை தாங்க சிறப்பு விருந்தினர்களாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளையின் தலைவர் இன்ஜினியர் ஜி .ராஜசேகரன், பாரதிதாசன் பல்கலைக்கழக மண்டல ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் எம்.மாணிக்கவாசகம், பெடரல் வங்கி திருச்சி மண்டல தலைவர் சி.ராஜா சீனிவாசன் அவர்களும் கலந்து கொண்டு இரத்தம் வழங்கிய கொடையாளர்களை பாராட்டினர்.
திருச்சி மண்டல பெடரல் வங்கி அலுவலர்களும் தந்தை பெரியார் கல்லூரி மாணவர்களும் சேர்த்து 58 யூனிட் இரத்தம் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் இருந்து இரத்த மைய மருத்துவ அலுவலர் மருத்துவர் பா.அரவிந்த்,இரத்த வங்கி ஆற்றுநர் .ந.பாலசந்தர் மற்றும் இரத்த வங்கி குழுவினரும் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர்.
திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. குணசேகரன் ஒருங்கிணைத்தார் . யூத் ரெட் கிராஸ் மாணவர்களும் பெடரல் வங்கி அலுவலர்களும் இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.