திருச்சியில் ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர். ஆய்வு செய்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
2024 -25 ஆம் ஆண்டு நிதியாண்டின் கீழ் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்காக காணொளி வாயிலாக திறந்து வைத்தார் ..
கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்களை ஆய்வு செய்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாநகராட்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சோழமாதேவி ஊராட்சியில் அமைந்துள்ள ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2023- 24 ஆம் நிதி ஆண்டின் கீழ் தமிழக அரசு இரண்டு பள்ளிகளில் வகுப்பறைகள் 6 கணினி ஆய்வகம் 2, அறிவியல் ஆய்வகம் 1, பொருட்கள் பாதுகாப்பு அறை1,என்று ரூபாய் 2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை இன்று காணொளி வாயிலாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும் தமிழக முதல்வர் திறந்து வைத்த கட்டிடங்களை திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் பாதுகாப்பு அறைகள் அனைத்தையும் ஆய்வு செய்து ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.
மேலும் பள்ளி மாணவர்கள் பாடங்களை கவனிப்பதற்கு ஏதுவாக புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளில் கரும்பலகைக்கு பதிலாக செராமிக் கிரீன் போர்டு அமைக்கப்பட்டுள்ளது .
மேலும் இதே போல் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைக்கு வெளியே தகவல் பலகை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்வின்போது மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதிவாணன்,திருச்சி மாவட்ட செயற்பொறியாளர் தாட்கோ நவநீதகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவா, திருவெறும்பூர் தாசில்தார் தனலெட்சுமி , திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த் மற்றும் அண்ணாதுரை, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் மாமன்ற உறுப்பினர் தாஜுதீன் காட்டூர் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன்மொழி மற்றும் சோழமாதேவி ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தகுமாரி உட்பட பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.