திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்க 17ம் ஆண்டு விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் . அமைச்சர் கே என் நேரு பங்கேற்பு.
திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்க 17ம் ஆண்டு விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
அமைச்சர் கே என் நேரு பங்கேற்பு.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்கத்தின் திருச்சி மாவட்ட சங்கத்தின் 17ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அஜந்தா ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட தலைவர் நல்லசங்கி தலைமை தாங்கினார்.மாவட்ட அவைத்தலைவர் கணேசன் வரவேற்புரையாற்றினார்.ஆண்டறிக்கை மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயராமன் வாசித்தார்.நிதிநிலை அறிக்கையை செல்லமுத்து வாசித்தார்.
விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, துரை. வைகோ எம்பி,திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி,தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர்கள் சங்க மாநிலத் தலைவர் குணசேகரன், மாநில அவைத்தலைவர் சாமி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்துரை வழங்கினார்கள்.
கூட்டத்தில்
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவப் பணி ரூபாய் 1000 வழங்குவது போல தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும்.
திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் முதலாம் அணி மருத்துவமனையை முழு நேர மருத்துவமனையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வூதியர்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் அடிப்படை ஓய்வூதியத்தில் வருடம் தோறும் ஓய்வூதிய உயர்வு ஒரு சதவீதம் சேர்த்து வழங்கிட வேண்டும்.
.புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ செலவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஒட்டி 21 மாதம் நிலுவைத் தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
ஓய்வூதியர்கள் இறந்து விட்டால் அவரது வாரிசு களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி
ரூ.ஒரு லட்சம் ஆக உயர்த்தி தர வேண்டும்.
தற்போது காவல்துறையில் பணிபுரியும் காவல் காவலர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.