திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் காந்தி முகமூடி அணிந்து மதுவுக்கு எதிராக கையொழுத்து இயக்கம்
காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை மக்கள் சக்தி இயக்கத்தினர் திருச்சியில் காந்தி முகமூடியை அணிந்து கொண்டு மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
சத்திரம் பேருந்து பகுதியில் உள்ள பொதுமக்களிடம் மதுவிலக்குக்கு ஆதரவு கோரி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதில் மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம், திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, குமரன், கனகராஜ், சந்துரு, வெங்கடேஷ், மற்றும் பலர் கலந்துக்கொண்டார்கள்.