நாளை நடைபெற உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன 7 வது பட்டமளிப்பு விழாவில் 82 மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர் .
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி (IIITT), 2025 ஆம் ஆண்டு பல்வேறு பாடநெறிகளை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்காக தனது ஏழாவது பட்டமளிப்பு விழாவை, நாளை 1ம் தேதி.அக்டோபர் 2025 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த விழாவில், தத்துவ ஆய்வாளர்களுக்கான (Ph.D.) பட்டம் 5 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில், இரண்டு பேர் இயந்திரவியல் பொறியியல் துறையிலும், இரண்டு பேர் கணிதத் துறையிலும், மற்றும் ஒருவர் இயற்பியல் துறையிலும் (அறிவியல் மற்றும் மனிதவியல் துறையின் கீழ்) பட்டம் பெறுகிறார்கள்.
மேலும், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (M.Tech. CSE) துறையில் 4 மாணவர்களுக்கு முதுநிலை பட்டங்கள் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து, 36 மாணவர்கள் B.Tech. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையிலும், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் துறையிலும் பட்டங்களைப் பெற உள்ளனர். 37 மாணவர்கள் B.Tech. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொரியல் துறையிலும் பட்டங்களை பெற உள்ளனர் . இவ்விழாவில் மொத்தம் 82 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளது.
இந்த ஆண்டு தங்கள் துறைகளில் உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களான சாமுவேல் நாடார் (B.Tech. CSE), ரோஹித் ராஜ் (B.Tech. ECE) மற்றும் அஞ்சலி (M.Tech. CSE) ஆகியவர்களுக்கு தங்கப்பதக்கத்தை இந்நிறுவனம் அளிக்கவுள்ளது. இதனுடன், சிறந்த கல்விச் செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக நிறுவன தங்க பதக்கத்தை, சாமுவேல் நாடார் பெறவுள்ளார். அத்துடன், இந்த மாணவர் GATE-2025 தேர்வில் Computer Science and Information Technology (CS) பிரிவில் இந்திய அளவில் 14வது இடமும், Data Science and Artificial Intelligence (DA) பிரிவில் 21வது இடமும் பெற்றுள்ளதை நிறுவனம் மனமார்ந்த பாராட்டுகளுடன் தெரிவிக்கிறது.
இத்துடன், Visvesvaraya Ph.D. திட்டம் செயல்படுத்துவதற்கான . ஒப்புதல் ஆணையும் வழங்கப்பட்டுள்ளது .5 தகுதியான ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மாணவர்களுக்கு உதவித்தொகை பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு பட்டம் பெற்றவர்களில் 58 சதவீதம் பேர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்பதை அறிவிப்பதில் இந்நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது. இதில் குறிப்பிடத்தக்க வகையில், 5 மாணவர்கள் அமேசான் (Amazon) நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.47 லட்சம் வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளனர். மேலும், ஒரு மாணவர் ஹிவோ (Hevo) நிறுவனத்தில் ஆண்டுக்கு ₹30 லட்சம் ஊதியத்தில் பணியமர்ந்துள்ளார் மற்றும் நான்கு மாணவர்கள் வால்மார்ட் (Walmarti நிறுவனத்தில் ஆண்டுக்கு ₹23 லட்சம் ஊதியத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி (IITT). தனது வளர்ச்சிக்கான புதிய முயற்சிகளை பெருமையுடன் பகிர்கிறது. 2025-26 கல்வியாண்டில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவியல் அறிவியல் (B.Tech, CSE AI & DS) மற்றும் மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் VLSI வடிவமைப்பு (B.Tech. ECE VLSI Design) ஆகிய துறைகளில் இரண்டு புதிய பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடநெறிக்கும் 30 மாணவர்கள் சேர்க்கை அளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
மேலும், இக்கல்வியாண்டில் M.Tech. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (CSE) மற்றும் VLSI அமைப்பு (VLSI Systems) ஆகிய துறைகளுக்கான நேரடி சேர்க்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ANRF பிரதம மந்திரி ஆரம்பகால தொழில் ஆராய்ச்சி திட்டம் மற்றும் ANRF -ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான கூட்டு முயற்சி (PAIR) திட்டத்தின் கீழ், ஆராய்ச்சி உதவித்தொகைகளைப் ஆசிரியர்கள் பெற்றுள்ளனர். இது நிறுவன ஆராய்ச்சி சூழலுக்கான முக்கிய முனைவாகும். அதே நேரத்தில், AICTE QIP (Quality Improvement Programme) தர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், “3D Printing and Additive Manufacturing” (இயந்திரவியல் பொறியியல் துறை) துறை) “Machine Learning and Cyber Physical Systems” ( ஆகிய இரு பயிற்சித் திட்டங்களும் AICTE-அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது, பிற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கும் வாய்ப்பை உருவாக்குகிறது. கூடுதலாக, கணினி அறிவியல் மற்றும் பொறியியல், இயந்தி பொறியியல் மற்றும் கணிதத் துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பொறியியல் டிப்ளமோ நில படிப்புகளுக்கான பாடங்களை சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட் ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NITTTR, Chennai) கீழ் SWAYAM Portal மூலம் வழங்குகின்றனர்.
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி (ITT), தனது ஏழாவது பட்டமளிப்பு விழாவின் பிரதான விருந்தினராக எஸ். கிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., செயலர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், புது தில்லி, இந்திய அரசைச் சேர்ந்தவர் பங்கேற்க உள்ளார்.
1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கடலூர் துணை கலெக்டராக தனது பணியாணையைத் தொடங்கிய இவர், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நிர்வாக அனுபவம் கொண்ட ஒரு சிறப்புமிக்க மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் நிர்வாகியாக விளங்குகிறார். தமிழ்நாடு அரசின் நிதித் துறை துணைச் செயலராக, தமிழ் நூல்கள் கழகத்தின் இயக்குநராக, மற்றும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலராக உள்ளிட்ட பல பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். தற்போது, அவர் இந்தியா செமிகண்டக்டர் மிஷன் மற்றும் இந்தியா AI மிஷன் போன்ற பல தேசிய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். இவ்விழாவில், இவரது அனுபவ அறிவு நிறைந்த உரை பட்டம் பெறும் மாணவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
உஷா நடேசன், இயக்குனர் (பொறுப்பு), IIITT, விழாவில் நிறுவன அறிக்கையை வழங்கி, பட்டங்களை மாணவர்களுக்கு வழங்குவார். மேலும், நிறுவனத்தின் நிர்வாக குழுத் தலைவர் அனில் கும்ப்ளே, விழாவில் மெய்நிகர் (virtual) வழியாக பங்கேற்கிறார். நிர்வாக குழு (BoG) மற்றும் Senate உறுப்பினர்களும், விழாவில் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதோடு, பட்டம் பெறும் மாணவர்களின் பெற்றோர்கள், ஊடகத்துறை பிரதிநிதிகள், பேராசிரியர்கள், மற்றும் பங்கேற்பார்கள் விருந்தினர்கள் அனைவரும் நிகழ்வில் பங்கேற்க உள்ளனர் .