திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் சிரா இலக்கியக் கழகத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா -2025 சிரா இலக்கியக் கழகத் தலைவர் எழுத்தாளர.
கேத்தரின் ஆரோக்கியசாமி தலைமையிலும், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் அமைச்சர்
தமிழவேள் பெ. உதயகுமார் முன்னிலையில், நோக்க உரை சிரா இலக்கியக் கழக நிறுவுநர் மற்றும் துணைத்தலைவர் முனைவர் பா. ஸ்ரீ ராம் அவர்கள் வழங்க சிறப்பு விருந்தினர் அறிமுகவுரை சிரா இலக்கியக் கழகச் செயலாளர் பா. முகமது சஃபி அறிமுகவுரை நடந்திட கவிஞர் சை. அப்துல் ரபீக் வரவேற்புரை வழங்கிட குழந்தை ஈகவரசன் தமிழிசைக்க கல்யாணி கணேசன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்க விழா இனிதே ஆரம்பமானது.
பாராட்டு பெறும் சிறப்பு விருந்தினர் தமிழ்ச்செல்வன் திருக்குறள் புலவர் தமிழறிஞர் நாவை சிவம் அவர்களுக்கு முன்னதாக குறளரசர் விருதுவழங்கி மருத்துவர் எம். ஏ. அலீம் மற்றும் பேராசிரியர் முனைவர் சு. செயலாபதி கவிஞர் வல்லநாடன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துரை நல்கினர். தொடர்ச்சியாக நாவை. சிவம் ஐயா பொற்கரங்களால் நனி நல்லாசிரியர் விருதினைப் பேராசிரியர்கள் மற்றும்
ஆசிரியர்கள், சிறந்த தனிப் பயிற்சி மையப் பயிற்றுனர் அனைவரும் பெற்று
மகிழ்ந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் ஏற்புரையை முனைவர் ஆ.இராசாத்தி மற்றும் ஆசிரியர் வீரத்தமிழ் மகா நிகழ்த்தினர்.நனி நல்லாசிரியர் விருது கவிஞர் சிர்வா, முனைவர் இராசாத்தி, முனைவர் நல்லமுத்து, கவிஞர் கவிதா அசோகன், கவிஞர் வீரத்தமிழ் மகா, முனைவர் ப.விஜயகுமார் கவிஞர் மா. புவனேஸ்வரி,கவிஞர் பா. லெட்சுமி ஆசிரியை கற்பகலெட்சுமி ஆகியோருக்கு வழங்கி பாராட்டப் பட்டது.. சிறந்த தனிப்பயிற்சி பயிற்றுநர் விருது கவிஞர் தேவகிருபா மற்றும் கவிஞர் வை. கல்பனா கணேசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.விருதுகள் வழங்கியவுடன் ஆயிரம் பிறை கண்ட நாவை. சிவம் ஐயா மற்றும் அனைவரும் சேர்ந்து விருதாளர்கள் தமிழ் போல் வாழ்க, ஆல் போல் வளர்க, பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்னும் நல்ஆசியும் வாழ்த்துகளையும் கூறினர்.நன்றியும், மற்றும் பல எழுத்தாளர்கள் இவ்விழாவில் கலந்து பாராட்டும் தெரிவித்து விழாவினைச் சிறப்பித்தனர்.
கவிஞர் தேவகிருபா நன்றியுரை வழங்கினார் .
இவ்விழாவை சிரா இலக்கியக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தினர் .
சிரா பதிப்பக நிறுவுநர் மற்றும் சிரா இலக்கியக் கழகப் பொறுப்பாளருமான கவிஞர் இரா.தங்கபிராகாசி ஒருங்கிணைத்து விழா ஏற்பாடுகளைச் செய்தார்.
இந்நிகழ்வை கவிஞர் கல்பனா கணேசன் சிறபாகத் தொகுத்து வழங்கினார்.