பாரதிதாசன் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் 10வதுஆண்டாக ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்.
பாரதிதாசன் பல்கலைக்கழக
மண்டலங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் 10வதுஆண்டாக ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்லதிற்குட்பட்ட கல்லூரிகளின் மண்டலங்களுக்கு இடையிலான மாணவர்களுக்கான
கபடி போட்டி திருச்சி, ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.
இதில் திருச்சி மண்டலத்திலிருந்து, ஜமால் முகமது, கரூர், கொங்கு கலை மற்றும் அறிவியல், மணப்பாறை, ஆலத்தூர், ஆதவன் கலை மற்றும் அறிவியல்
தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல், தஞ்சை, கரந்தை, டி யூ கே கலை, புதுகை, மேலசிவபுரி, கணேசர் கலை மற்றும் அறிவியல் ஆகிய 6 கல்லூரி அணிகள் லீக் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றன.
லீக் போட்டிகளில் ஜமால் முகமது கல்லூரி 5 போட்டிகளிலும் வென்று 10 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்து திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக கபடி போட்டியில் தொடர்ந்து 10 வது ஆண்டாக
கல்லூரிகளின் மண்டலங்களுக்கு இடையிலான மாணவர்களுக்கான
கபடி போட்டியில் சாம்பியன் அணியாக திகழ்ந்து வருகிறது.
கரூர், கொங்கு கலை மற்றும் அறிவியல் மற்றும் மணப்பாறை, ஆலத்தூர், ஆதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணிகள் 3 போட்டிகளில் வென்று ஒரு போட்டிய சமனில் முடிந்ததால் இரு அணிகளும் தலா 7 புள்ளிகள் எடுத்தால் புள்ளிகள் விகித அடிப்படையில் மணப்பாறை, ஆலத்தூர், ஆதவன்
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
இரண்டாவது இடத்தையும்,
கரூர், கொங்கு கலை மற்றும் அறிவியல் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
புதுகை, மேலசிவபுரி, கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகள் எடுத்து நான்காவது இடம் பிடித்தது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர், ஏ. கே. காஜா நஜீமுதீன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் மூன்று இடம் பிடித்த அணிகளுக்கு கோப்பைகளும் மற்றும் நான்கு இடம் பிடித்த அணிகளுக்கு சான்றிதழ்களும் உறுபினர் மற்றும் மதிப்புறு இயக்குனர் கே. என். அப்துல் காதர் நிஹால், முதல்வர், டி. ஐ. ஜார்ஜ் அமலரத்தினம், உடற்கல்வி இயக்குனர் பி. எஸ். ஷா இன் ஷா, பாரதிதாசன் பல்கலைக்கழக
உடற்கல்விதுறை மற்றும் விளையாட்டு போட்டி செயலாளர் பேராசிரியர் ஏ. மெஹபூப் ஜான் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.