திருச்சி தென்னூரில் சலூன் கடையை சேதப்படுத்தி ரு.2.16 லட்சம் திருடியதாக பெண் உள்ளிட்ட3 பேர் மீது வழக்கு.
திருச்சி தென்னூரில் சலூன் கடையை சேதப்படுத்தி ரு.2.16 லட்சம் திருடியதாக பெண் உள்ளிட்ட3 பேர் மீது வழக்கு.
திருச்சி உய்ய கொண்டான் திருமலை கீழ வீதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ஆர்த்தி (வயது 41). திருச்சி தென்னூரில் உள்ள வணிக வளாகத்தில் சலூன் கடை வைத்துள்ளார்.
இவர் வாடகை அடிப்படையில் அழகு நிலையம் மற்றும் சலூன் கடையை நடத்தி வருகிறார்.
இதற்கிடையில், அகிலா, கடையை காலி செய்யுமாறு ஆர்த்தியிடம் கூறினார். கடையை காலி செய்யாமல் இது தொடர்பாக ஆர்த்தி ஒரு சிவில் வழக்கை தாக்கல் செய்தார், அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், அகிலா, தந்தை சிவலிங்க பிள்ளை மற்றும் அகிலாவின் சகோதரர் ஆகியோர் சம்பவத்தன்று, சலூன் கடைக்குள் அத்துமீறி நுழைந்து, கடை பொருட்களை (ரூ.20 லட்சம் மதிப்புள்ள) சேதப்படுத்தி, 2.16 லட்சம் ரூபாய் பணத்தை திருடியதாக தெரிகிறது.
இது குறித்து ஆர்த்தி கடையின் உரிமையாளர் அகிலாவிடம் கேள்வி கேட்டபோது, ஆர்த்தியை மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினார். இதுகுறித்து ஆர்த்தி தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதன் அடிப்படையில் தில்லை நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பந்தப்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.