பாலக்கரையில் திடீர் தற்கொலை
போலீசார் விசாரணை
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44 ) இவர் சையது ரஃபி (வயது 43) என்பவரை கலப்புத் திருமணம் செய்தார்.
பின்னர் அரபு நாட்டில் வேலை பார்த்து வந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு
திருச்சி திரும்பினார்.
அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது இதனால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்தார் இருப்பினும் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட இயலவில்லை
இதனால் மனம் உடைந்த அவர் நேற்று வீட்டின் அறையை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு மது அருந்தினார் .அதன் பின்னர் அங்குள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது .
இது குறித்து அவரது மனைவி சையது ரஃபி பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.