திருச்சி பொன்மலை போலீசாரின் அதிரடி வேட்டையில் போதை ஊசி, மாத்திரைகளுடன் 3 வாலிபர்கள் கைது. 2 பேர் எஸ்கேப்.
திருச்சி பொன்மலை காவல் நிலைய போலீசார் அதிரடி வேட்டையில்
போதை ஊசி, மாத்திரைகளுடன் 3 வாலிபர்கள் கைது.
2 பேர் எஸ்கேப்.
திருச்சி பொன்மலைப்பட்டி சாய்பாபா கோவில் அருகில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர் .அப்போது அப்பகுதியில் போதை மாத்திரைகள், ஊசிகள், வாட்டர் பாட்டில், குளுக்கோஸ் பாட்டில் ஆகியவற்றுடன் 5 வாலிபர்கள் நின்று கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
உடனடியாக அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
இதில் கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த சக்திவேல், சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த அகஸ்டின் கெவின், பொன்மலையைச் சேர்ந்த மெல்வின் மோகன்ராஜ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஜான் பாஸ்கோ, அந்தோணி லாசர் ஆகிய இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பொன்மலைக் காவல் நிலைய போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்
.கைதானவர்களிடம் இருந்து குளுக்கோஸ் பாட்டில், மாத்திரைகள், போதை ஊசிகள், குடிநீர் பாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.