ஸ்ரீரங்கம் மேலூர் சாலை பாலத்தில் உறங்கிய முதியவர் மீது மினி பஸ் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாப பலி .
ஸ்ரீரங்கம் மேலூர் சாலை பாலத்தில் உறங்கிய முதியவர் மீது மினி பஸ் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாப பலி .
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

ஸ்ரீரங்கம் சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர் ரகுபதி (வயது 64).இவர் மினி பஸ் ஓட்டி வந்தார்.இந்த மினிபஸ் ஸ்ரீரங்கத்திலிருந்து மேலூர் ரோட்டில் மூலத்தோப்பு வழியாக கட்டப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.அந்தப் பாலத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக அந்த மினிபஸ் முதியவர் மீது ஏறி இறங்கியது.இதில் உடல் நசுங்கி அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் வழக்குப்பதிந்து மினிபஸ்சை பறிமுதல் செய்தார். மேலும் டிரைவர் ராமர் ரகுபதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

