மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் அனைத்து அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் முன்னிலையில் திருச்சி கலெக்டர் இன்று ஆய்வு.
அனைத்து அரசியல் கட்சிகள் முன்னிலையில்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் கலெக்டர் இன்று ஆய்வு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று ( மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் திறந்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறை இன்று (18.09.2025) வியாழக்கிழமை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணனால் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்படி மின்னணு வாக்குபதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கில் 16726 எண்ணிக்கையுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சாலை தவ வளன், தேர்தல் தனி வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.