திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம் .
9/09/25 அன்று திராவிட முன்னேற்ற கழக தலைவர் தமிழக முதல்வர்
மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இன்று மாவட்ட செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் என். கோவிந்தராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகரக் செயலாளர் மு.மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், சபியுல்லா, செந்தில்,
பகுதி செயலாளர் மோகன், மற்றும் .மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கீழ் வருமாறு :-
1. ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த பலரின் கனவாக இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கனவாக எழுந்த சுயமரியாதை இயக்கத்தையும், புரட்சியாளர் பெரியாரையும் போற்றி அவரது திருவுருவ படத்தினை திறந்து வைத்தும், தமிழகத்தின் தொழில்வளத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை பெருக்கவும், அந்நியநாட்டின் முதலீடுகளை ஈர்த்து வந்த தமிழக முதல்வர், திமுக தலைவர் அவர்களுக்கு இம்மாவட்ட செயற்குழு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
2. 50 ஆண்டுகாலத்திற்கும் மேலாக அரசியல் பொதுவாழ்வில் சொல்லணா தியாகங்களை புரிந்து, மிசாவில் சிறையில் அடைக்கப்பட்டு, கொடுமைக்கு ஆளான நமது திமுகத்தலைவரைஒன்றிய அரசின் கைக்கூலியாக செயல்பட்டு தான் செல்லும் இடங்களிலெல்லாம், தலைவர் அவர்களை ஒருமையில் பேசி விமர்சித்துவரும் அடிமை எடப்பாடி பழனிச்சாமியை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது.
3. கரூர் மாவட்டத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் நமது திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக பெருந்திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.