திருச்சியில் மாவட்ட அளவிலான கால்பந்து
இறுதிப்போட்டியை போலீஸ் துணை கமிஷனர் தொடங்கி வைத்தார்.
கால்பந்து டெவெலப்மென்ட் திருச்சி – 2025 சார்பாக டக் அவுட் ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரீட், மண்ணச்சநல்லூர் கால்பந்து கிளப் சார்பில் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது.
இதில் அண்டர் லெவன் கேட்டகிரியில் திருச்சி முழுவதும் 10 அணிகள் கலந்து கொண்டு போட்டியில் விளையாடின.
இறுதிப் போட்டியை திருச்சி தெற்கு மண்டல துணை கமிஷனர் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் டிரன் எப்.சி அணி முதலிடத்தையும், டிரஃப்- 09 அணி இரண்டாம் இடத்தையும், டக் அவுட் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.
இதில் டிரன் எப்.சி அணி சார்பாக பங்கேற்ற முகிலன் 18 கோல்களை அடித்து ஸ்டார் விளையாட்டு வீரராக தேர்வாகியுள்ளார்.
வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.