திருச்சி மண்டல ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி ஜல்லிக்கட்டு சாலையில் நடைபெற்றது .
மாநில அளவிலான தேர்வு போட்டியாக நடைபெற்ற இந்த போட்டிக்கு திருச்சி மண்டல ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் துணைத் தலைவர் டாக்டர் கணபதி சுந்தர் தலைமை தாங்கினார் .
திருச்சி மாநகர மேயர் அன்பழகன் முன்னிலை வைத்தார் .
திருச்சி மாவட்ட அளவிலான 4 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப் போட்டிகளில் பங்கேற்றனர் .
இந்த போட்டிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கொடி அசைத்து தொடங்கி வைத்தார் .
இந்தப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற மொத்தம் 70 வீரர்-வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருச்சி மண்டல ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் மனோகர் , மாநில நடுவர் டாக்டர்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .