ஆசிரியர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து அசத்திய சிந்தம்பட்டி
அரசுப் பள்ளி மாணவர்கள்.
அரசு உயர்நிலைப்பள்ளி சிந்தம்பட்டியில் ஆசிரியர் தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தாயாக ,தந்தையாக, நல்ஆசானாக, தோழனாக ,
வாழ்வின்
வழிகாட்டியாக விளங்கக்கூடிய ஆசிரியர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்கள்
சிவப்புக் கம்பளம் விரித்து அதில் ஆசிரியர்களை நடக்க வைத்து இருபுறமும் நின்று கைத்தட்டி வரவேற்று வாழ்த்து மழை பொழிந்தனர். பல மாணவர்கள் ஆசிரியர்களின் பெருமை குறித்து உரையாற்றி கவிதை வாசித்தனர். அதனைத் தொடர்ந்து கேக் வெட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பள்ளியின் சார்பாக ஆசிரியர்களுக்குப் பூங்கொத்துடன் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மாணவர்கள் சார்பாக தலைமை ஆசிரியருக்கு பூங்கொத்துடன் புத்தகம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவாக அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது. மாணவர்கள் முன்னின்று ஆசிரியர்களை சிறப்பித்த இந்த அழகான நிகழ்வை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பள்ளியின் மேலாண்மைக் குழுவினரும்
ஊர்ப் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.