திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.
துறையூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பாலாஜி. இவா், ஞாயிற்றுக்கிழமை காலை தனது குடும்பத்தினருடன் வாடகை காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் புறப்பட்டுள்ளாா்.
காா் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சொரியம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது தீடீரென காா் தீப்பற்றியுள்ளது.
இதையடுத்து, காரிலிருந்தவா்கள் உடனே இறங்கிய வேளையில், காா் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
விபத்து குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) நாகேந்திரன் தலைமையிலான வீரா்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும் காா் முழுவதும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து வளநாடு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.