கிளப் ராயல் 7, ட்ரூ கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி மைதானத்தை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்
கிளப் ராயல் 7, ட்ரூ கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி மைதானத்தை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார் .
தமிழ்நாட்டில் முதல்முறையாக பெரிய அக்குவா புல் தரை விளையாட்டு மைதானம் திருச்சி உறையூர் லிங்கநகர், வெங்கடகிருஷ்ணா ருக்மணி காலனி, மேலப்பாண்டமங்கலம் பகுதியில் இன்று புதியதாய் உதயம் ஆனது .
இந்த விளையாட்டு மைதானத்தை தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார் .
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர மேயர் மு.அன்பழகன், தொழிலதிபர் தில்லை நகர் கண்ணன், புத்தூர் கே.தர்மராஜ், ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .
11000 சதுர அடி பரப்பளவில் அக்குவா புல் தரை கிரிக்கெட் மற்றும் புட்பால் விளையாட்டு மைதானம் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்காக துவங்கப்பட்ட இந்த மைதானத்தை ராயல் பேர்ல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜானகிராமன் அவர்கள் தனது முயற்சியால் உருவாக்கி உள்ளார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நாராயணன், கல்யாணி நாராயணன், பிரியதர்ஷினி ஜானகிராம், ஸ்ரேயாணி ஜானகிராம் , டாக்டர் சத்யநாராயணன், டாக்டர் அஸ்ரிதா, மைதான ஒருங்கிணைப்பாளர் பெனடிக்ட், மேக்மிலன், கவிதா, ரேவதி, சீனிவாசன் மற்றும் ராயல்பேர்ல் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.