ஒட்டுமொத்த திருச்சி மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப, திருச்சி மத்திய பேருந்து நிலையம், அதே இடத்தில் முன்பு போல செயல்படடும். அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் .
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் .ப. செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அம்மா மக்கள் முன்னேற்ற கழக . பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்குபெறும் புதிய “வெற்றி கூட்டணி”யின் புதிய அரசு அமைந்த உடன், பழைய பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்படும்.
பாண்டிச்சேரி போலீஸ் தொப்பி மாடல் என்று இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவால் அழைக்கப்பட்ட,
அன்றைய திமுக அரசால் புதிய சட்டமன்றத்திற்கென்று கட்டப்பட்ட கட்டடத்தை,
இதயதெய்வம் புரட்சித்தலைவி ஆட்சி அமைத்தவுடன் எப்படி பல்நோக்கு மருத்துவமனை ஆக்கினாரோ,
அதேபோல் வருகின்ற 2026 ஆம் ஆண்டு, டிடிவி தினகரன் பங்குபெறும் “வெற்றி கூட்டணி” ஆட்சி அமைத்தவுடன்,
திருச்சி மக்களுக்கு பயன்படுத்த முடியாத இடத்தில் அமைந்துள்ள பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் (விராலிமலை அருகே உள்ள),
மக்கள்செல்வர் ஆணையுடன், சென்னை, கோயம்புத்தூரில் உள்ள வர்த்தக மையங்கள் போல், திருச்சி வர்த்தக மையமாக ஆக்கப்பட்டு,
”
ஒட்டுமொத்த திருச்சி மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப, ஜங்ஷனில் உள்ள திரு லூர்துசாமி பிள்ளை பேருந்து நிலையம், அதே இடத்தில் முன்பு போல செயல்படுத்த துவங்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்
என்று செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .