Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மேயர் சொன்னா கேட்கணுமா அவர் என்ன பெரிய ஆளா ? திருச்சி பொன்மலை மண்டல உதவி ஆணையர் சண்முகம் தெனாவட்டு பேச்சு .

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் ரெனால்ட்ஸ் ரோடு பகுதிகயில் மட்டும் இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் என்ற பெயரில் ரோட்டோரம் உள்ள மாநகராட்சி பெட்டிகளுக்கு மட்டுமே அனுமதி எனக் கூறி ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது சரி , வெள்ளை கோட்டுக்கு உட்புறம் மாநகராட்சி பெட்டியின் எதிரில் சில அடி சிமெண்ட் தரை அமைத்து இருந்ததை கூட பொக்லிங் இயந்திரம் மூலம் கொத்தி எடுக்கப்பட்டது .

இதில் மாநகராட்சி பொன்மலை மண்டல உதவி ஆணையர் சண்முகம். ஏ டபுள்யூ வேல்முருகன் , ஜெ.இ. ராஜா ஆகியோர் மாமூல் தராத சில வியாபாரியிடம் மட்டும் கரார் காட்டி உள்ளனர் .

 

மேலும் ஒரு கடை எந்த போக்குவரத்து இடையூறும் இல்லாமல் தான் உள்ளது என மேயரிடம் தகுந்த ஆதாரத்துடன் எடுத்துக் கூறப்பட்டது . அதனை தொடர்ந்து மேயர் பொன்மனை மண்டல உதவி ஆணையர் சண்முகத்திடம் அந்த ஒரு கடையை மட்டும் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றுங்கள் என கூறினார் .

 

ஆனால் மேயர் என்ன பெரிய ஆளா ? அவர் சொன்னால் கேட்க வேண்டுமா என்று சொல்லியபடியே உதவி ஆணையர் சண்முகம் , ஏ டபுள்யூ வேல்முருகன் , ஜெ.இ. ராஜா ஆகியோர் அந்தக் கடையை மட்டும் தரைமட்டமாக இடித்து தகர்த்தனர் .

 

இதன் மூலம் திருச்சியில் ஆளுங்கட்சி மேயரை கூட அரசு அதிகாரிகள் மதிக்கவில்லை என்பது கண்கூடாக தெரியவந்துள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.