திருச்சி: 9. 50 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள்.அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்தார்.
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில்
ரூ 9 கோடியே 50 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள்
அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்தார்.
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பி னர் மேம்பாட்டு நிதி மற்றும் மாநகராட்சி நிதியின் கீழ் முடி . வுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு பூமி , பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் .
இதில் வார்டு 22-ல் வடவூர் பகுதியில் பி.வி.சி. தொட் டியுடன் கூடிய ஆழ்துளை கிணறு மற்றும் குடி நீர் தொட்டி, 9-வது வார்டில் உறையூர் மருத் துவமனை பகுதியில் முதல்வர் படைப்பகம் கட்டும் பணி, மருத்துவமனை சாலையில் உறையூர் தினசரி சந்தையினை திரும்ப கட்டும் பணி, 26-வது வார்டில் அல்லி துறை பிரதான சாலையில் புத்தூர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி வளாகத்தில் மண்டலம்-5 வது வார்டு குழு கூட்ட அரங்கம், 51-வது வார்டில் பக்காளித் தெரு பகுதியில் பல் நோக்கு அலுவலக பயன்பாட்டுக்கட்டிடம் கட்டி கொடுக்கும் பணி உள்பட வார்டு எண் 54, 56, 58, 62 பகுதியில் உள்ள முடிவுற்ற பணிகளை ரூ.9 கோடியே 85 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான தொடங்கி வைத்து புதிய பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட கலெக்டர் சரவணன். மேயர் அன்பழகன். மாநகராட்சி ஆணையர் மதுபாலன்.
மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி,
நகர பொறியாளர் சிவபாதம்,
மாவட்ட துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான முத்து செல்வம்,மத்திய மாவட்டம் முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்,
ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல்,பகுதி செயலாளர் மோகன் தாஸ், காஜாமலை விஜய், நாகராஜன், கமால் முஸ்தபா,இளங்கோ,முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்,மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,
மீனவர் அணி முள்ளிப்பட்டி பால்ராஜ்,
வர்த்தக பிரிவு மாவட்ட அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம்,வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன் குமார்,மாவட்ட பிரதிநிதிகள் சோழன் சம்பத், கவுன்சிலர்கள் புஷ்பராஜ். மஞ்சுளா பாலசுப்பிரமணியன் . வட்டச் செயலாளர்கள் பெட்ரோல் பவுல்ராஜ், வாமடம் சுரேஷ், மார்சிங் பேட்டை செல்வராஜ், பி.ஆர் பாலசுப்பிரமணியன்,முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு
மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.