Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் ஒரே அளவுகோலில் வைத்து சலுகைகளை பாரபட்சமின்றி வழங்க வேண்டும். தமிழ்நாடு பத்திரிக்கை ஊடக பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் அல்லூர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் .

0

'- Advertisement -

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு பத்திரிகை ஊடக பாதுகாப்பு சங்க மாநில நிர்வாகிகள் சிறப்பு கூட்டம் மாநில தலைவர் அல்லூர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ஒருமனதாக

நிறைவேற்றப்பட்ட

தீர்மானங்கள் ….

 

 

1. RNI -ல் பதிவு செய்து வெளிவருகிற அரசியல் சமூக புலனாய்வு பருவ இதழ்களின் நிருபர்கள் தமிழ்நாடு பத்திரிகை நல வாரியத்தில் பதிவு செய்யலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.

2. RNI-ல் பதிவு செய்து வெளிவருகிற புலனாய்வு பருவ இதழ்களின் நிருபர்களுக்கு உரிய மரியாதை தராமல் தங்களுக் சென்று ஒரு வட்டத்தை உருவாக்கி செயல்படும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பாரபட்சமான போக்கினை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

 

3. காவல் துறையினர் சில வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் புலனாய்வு பத்திரிக்கையாளர்களின் உதவியை நாடலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கேற்ப புலனாய்வு இதழ் நிருபர்களை பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகளை கேட்டுக் கொள்வதோடு பத்திரிக்கையாளர் களுக்கு இடையிலான பிரச்னைகளை கையிலெடுத்து விசாரணை செய்வது ஏற்கதக்க ஒன்றல்ல என்பதனையும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு இக்கூட்டம் அறிவுறுத்துகிறது !

4. பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் ஒரே அளவுகோலில் வைத்து சலுகைகளை பாரபட்சமின்றி வழங்க தவறும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது!

5. அரசு விளம்பரங்கள் புலனாய்வு இதழ்களுக்கும் வழங்க வேண்டும் என்று அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது !.

6. அரசு சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வீட்டுமனைகளை புலனாய்வு பத்திரிக்கை நிருபர்களுக்கு வழங்கிட வேண்டுமென்று அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது!

 

உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.