திருச்சியில்
கஞ்சா, போதை மாத்திரை விற்ற வாலிபர்கள் கைது.
திருச்சி பாலக்கரை குட்செட் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கூனி பஜார் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவீந்தர்
(வயது 18 ) என்பதும் அவர் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது .
போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கம்போல தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணி சென்றனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் இ.பி சாலை அண்ணாநகரை சேர்ந்த சச்சின் (வயது 25 )என்பதும் ,அவர் அங்கு போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .
அவரிடமிருந்து 10 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது..