தூய மரியன்னை பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்க விழா.. மண்டல குழு தலைவர் மதிவாணன் தொடங்கி வைத்தார் .
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை
தூய மரியன்னை பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்க விழா
மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதிவாணன், அதிகாரிகள் பங்கேற்பு.
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை அரசு உதவி பெறும் தூய மரியன்னை நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டது.
காலை உணவு திட்டத்தை திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மதிவாணன் தொடங்கி வைத்தார்.
கவுன்சிலர் சீதாலட்சுமி முருகானந்தம் வரவேற்றார்.திமுக வட்ட செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி உதவியாளர் சரவணன்,உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன் ராம்,இளநிலை பொறியாளர் பிரசாத்,
கல்வி அதிகாரிகள்,மாநகராட்சி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள்,மற்றும் பள்ளியின் தாளாளர் ஜோசப் சர்ச்சில்,
தலைமைஆசிரியர் பாத்திமா விஜய ஸ்ரீ,,ஆசிரியர்கள்,
மாணவர்கள்,பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்..