வாக்குத்திருட்டியில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 6ஆம் தேதி ஒரு நாள் தொடர் முழக்க போராட்டம்.
வாக்குத்திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும், 2024 பாராளுமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 6ஆம் தேதி ஒரு நாள் தொடர் முழக்க போராட்டம் – வாக்குரிமையை காப்போம் இயக்கத்தினர் திருச்சியில் அறிவிப்பு.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் அது அதிர்ச்சியை ஏற்படுத்தி பேசு பொருளாக மாறி உள்ளது.
இந்த நிலையில் பல்வேறு ஜனநாயக அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து ‘வாக்குரிமை காப்பு இயக்கம்’ என்கிற இயக்கத்தை தொடங்கியுள்ளனர். அந்த இயக்கத்தின் சார்பில் திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் வக்கில் கொன்னடி மற்றும் காளியப்பன் ஆகியோர் பேசுகையில் …
தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது. பீகாரில் திட்டமிட்டு 60 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு கோடி வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என கூறப்படுகிறது. பாஜகவிற்கு வாக்களிக்காதவர்களை திட்டமிட்டே வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார்கள். நாடு முழுவதும் தேர்தலுக்கு முன்பாக சிறப்பு தீவிர திருத்தம் செயல் படுத்தும் படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அப்படி என்றால் பலரின் வாக்குரிமை பறிக்கப்பட வாய்ப்புள்ளது.
வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் 11 ஆவணங்களை சமர்ப்பித்து அவர்கள் வாக்காளர் பெயர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் அந்த 11 ஆவணங்களில் ஆதார் கார்டு உள்ளிட்ட சாமானிய மக்களிடம் இருக்கும் எந்த ஆவணங்களும் குறிப்பிடப்படவில்லை. இது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை.
எனவே மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வாக்குரிமையை திருடக்கூடாது. வாக்குத்திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும். இந்த தேர்தல் ஆணையத்தை கலைத்துவிட்டு உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் புதிய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.
பாஜக அரசை கலைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 6ஆம் தேதி திருச்சியில் மத்திய அரசு அலுவலகம் முன்பாக ஒருநாள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
திருச்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என கூறினார்கள்.