உள்ளம் தேடி இல்லம் நாடி, கேப்டன் ரதயாத்திரை நிகழ்ச்சிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.
தேசிய முற்போக்கு திராவிட கழக பொது செயலாளர் பிரேமலதா அவர்களின் தலைமையில் நடைபெறும் உள்ளம் தேடி இல்லம் நாடி, கேப்டன் ரதயாத்திரை நிகழ்ச்சி வருகின்ற செப்டம்பர் 14 ம் தேதி மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நடைபெறுகிறது.
இதற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஆர்.பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தேமுதிக விவசாய அணி துணை செயலாளர் TR. சரவணன், ‘மாற்றுத்திறனாளி அணி துணை செயலாளர் வாஞ்சி குமரவேல் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வசந்த் பெரியசாமி,’மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சுமதி ,குணசேகரன்,பொதுக்குழு உறுப்பினர்கள் ஜானபீட்டர், VC. துரைராஜ், சக்தி பெருமாள்ராஜ், மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் சிங்காரவேல், ஒன்றிய துணை செயலாளர் . அழகர், மணி, பரமசிவம்,ஒன்றிய அவைத்தலைவர் வேலுசாமி, மாவட்ட தொழிற்சங்கம் கலைவானன், நகர செயலாளர் AK. கோவிந்தராஜ், மாவட்ட இளைஞரணி சாகுல் ஹமீது, சின்னசாமி, மாவட்ட பிரதிநிதி முத்துராமன், நகர துணை செயலாளர் J. ஆரோக்கியதாஸ், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.