Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இப்பவே உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால், மக்களுக்கு நீ எப்படி பாதுகாப்பு கொடுக்கப் போகிறாய்? தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டவரின் தாய் காட்டம் .

0

'- Advertisement -

 

என் பிள்ளை மேலேயும் தப்பு இருக்கு. எதுக்கு அந்த மாநாட்டுக்கு போகணும்? எவனா இருந்தாலும் நம்ம வீடு தேடி வரட்டும்.

 

எவனை புடிச்சிருக்கோ அவனுக்கு ஓட்டு போடுவோம். அவனவன் எதை எதையோ கொள்ளையடிக்கிறான். எதுவோ செய்கிறான். இது நமக்கு தேவையில்லாத விஷயம் பவுன்சர்ர்களால் தூக்கி வீசப்பட்டவரின் தாய் :

 

தவெக மதுரை மாநாட்டில், 2500 ஆண் பவுன்சர்கள், 500 பெண் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். விஜய் “உங்கள் விஜய்…. நான் வரேன்… ” என்ற பாடலுடன் தொண்டர்கள் மத்தியில் ராம் வால்க் மேற்கொண்டார். அப்போது விஜயை நெருங்கி வந்த தொண்டர்களை அருகில் இருந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்கள் யாரும் ஏறிவிடக்கூடாது என இரும்புக்கம்பிகளில் கிரீஸ் தடவி இருந்தனர் விழா ஏற்பாட்டாளர்கள். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய் ராம்ப் வாக் சென்றபோது அவரது ரசிகர்கள், பவுன்சர்ஸ்களையும் தாண்டி மேடையில் ஏறிக் குதித்து விஜய் அருகே நெருங்கி வந்தனர்.

 

அவர்களை தடுத்த பவுன்சர்கள் குட்டுக் கட்டாக மேடையில் இருந்து தூக்கி எறிந்தனர். அப்போது ஒரு ரசிகர் கீழிருந்து ராம்ப்வாக் மேடையில் ஏறியபோது பவுன்சர் ஒருவர் அவரை அலேக்காகத்தூக்கி தரையில் எறிந்தார். இதில் துடிதுடித்துப்போன அந்த ரசிகர் காலில் முறிவு ஏற்பட்டு அந்த இடத்தில் இருந்து எழுந்து செல்ல முடியாமல் வேதனையில் அழுது கதறியபடி தரையில் புரண்டு தவித்தார். அப்போது அவரை யாரும் கண்டுகொள்ளவோ, உதவி செய்யவோ முன்வரவில்லை. விஜயை மட்டுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதேபோல் மற்றொரு இளைஞரை பவுன்சர்கள் தூக்கி எறிந்தபோது அவர், லாவகமாக அணில் குஞ்சு போல கம்பியைப்பிடித்து தொற்றிக் கொண்டார். அவர் கீழே விழுந்திருந்தால் அவரது கைகால்கள் உடைந்திருக்கும் அல்லது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும்.

 

இதனை வீடியோவாகப் பார்த்த அந்த இளைஞர்களின் குடும்பத்தினர், தங்கள் பிள்ளைகள் மீது பவுண்சர்கள் நடத்திய தாக்குதலை பார்த்து நடுங்கிப்போயுள்ளனர். குண்டுக்கட்டாக தூக்கியெறியப்பட்ட இளைஞரில் ஒருவர் பெரும்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவை சேர்ந்த பெருமாள்பாளையத்தைச் சேர்ந்தவர்.

அவரது தாய் சந்தோசம் இருந்து குறித்து பேசி உள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது . அதில் அவர் கூறியிருப்பதாவது :-

‘எங்க பையன் பேரு சரத்குமார். மதுரையில் விஜய் மாநாடு நடக்குது போகிறேன்னு சொன்னான். போகாதப்பான்னு சொல்லி வைச்சேன். இல்ல மாநாட்டுக்கு போகல. ஒரு இண்டர்வியூக்காக திருச்சிக்கு போறேன்னு சொல்லிட்டு இவன் மாநாடு பார்க்க போயிருக்கான். அது எனக்கு தெரியாது. போன் போட்டு, ‘எங்கப்பா இருக்கா?னு கேட்டதுக்கு ‘இந்தா வர்றேம்மா’னு சொன்னான்.

 

விஜய் மேல இருக்குற ஆர்வத்துல இவன் மேல ஏறி போயிட்டான். அவன் அவ்வளவு தூரம் அந்த விஜய் மேல ஆர்வமா இருந்திருக்கான். சரி மேடையில ஏறிட்டான்.. பொறுமையா போப்பான்னு சொல்லி விலக்கி விட்டிருக்கணும். இல்ல நகர்த்தி தாண்டி விட்டிருக்கணும். தூக்கி பந்தக் கடாசுவது மாதிரி, குப்பையை தூக்கி எறியுற மாதிரி கடாசி இருக்காங்க.அவன் கை, கால் உடைந்து இருந்தால், உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது? என் குடும்பம் வசதி வாய்ப்பில்லாத குடும்பம். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு என் பிள்ளையை வளர்த்தேன்னு எனக்குத்தான் தெரியும்.

 

 

ஒரு உயிரோட வேல்யூ என்னவென்று விஜய்க்கு தெரியுமா? தெரியாதா? விழுந்தானே அவனை நீங்கள் பிடித்தீர்களா? கண்டுக்காம நடந்து வேடிக்கையா பார்த்து போய்க்கிட்டுதானே இருந்த… கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறான். அப்போது கூட அவனை விஜய் பார்த்தும் கண்டுக்கல. அவன் கம்பியை பிடித்து தொங்கவில்லை என்றால் அன்னைக்கு செத்து இருப்பான்.

 

நாங்க தான் பிள்ளையை இழந்து போய் இருக்கணும். இப்பவே உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால், மக்களுக்கு நீ எப்படி பாதுகாப்பு கொடுக்கப் போகிறாய்?

 

செய்கிறேன்… செய்கிறேன் என்று சொல்லக்கூடாது. ஆட்சிக்கு வரும் முன்பே ஒருத்தன் செய்யணும். மக்களிடம் சும்மா அவன் சொத்த… இவன் சொத்தனு அடுத்தவங்களை குறை சொல்லக்கூடாது. நம்ம செய்யணும். நம்ம மக்களுக்கு சரியாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். உனக்காக வந்த ரெண்டு இளைஞர்கள் செத்து இருக்கிறார்கள். ஒருத்தன் மூச்சு திணறல் ஏற்பட்டு செத்திருக்கிறான். ஒருத்தன் கரண்ட் அடித்து செத்து இருக்கிறான். அவங்க உயிரை நீ என்ன பணம் கொடுத்தாலும், என்ன ஈடுகட்டினாலும் உயிரை நீ திரும்ப கொடுக்க முடியுமா?

 

அவன் அப்பா, அம்மாவுக்கு இருக்கிற பாசத்தை நீ கொடுக்க முடியுமா?

 

அத்தனை பேருக்கும் அண்ணனாக நிற்கிறேன். அனைவருக்கும் தாய் மாமனா இருக்கிறேன் என்கிறாய். எப்படி நீ தாய் மாமனாக இருப்பாய்? உன்னை பார்க்க மாநாட்டுக்கு வந்தவனுக்கு என்ன நீ மரியாதை கொடுத்திருக்கிறாய்? உனக்குத்தான் பாதுகாப்பு என்றால் இருக்கிறவன் உயிர் போக வேண்டுமா? அதற்காக மற்றவர்களை தூக்கி கட்ச்சி விடுவீர்களா? அப்படி சொல்பவனை தூக்கி கிடாசினால் உயிருடோட அருமை என்னவென்று தெரியும், வலி என்ன என்று தெரியும். என் பிள்ளை மேலேயும் தப்பு இருக்கு. எதுக்கு அந்த மாநாட்டுக்கு போகணும்? எவனா இருந்தாலும் நம்ம வீடு தேடி வரட்டும். எவனை புடிச்சிருக்கோ அவனுக்கு ஓட்டு போடுவோம். அவனவன் எதை எதையோ கொள்ளையடிக்கிறான். எதுவோ செய்கிறான். இது நமக்கு தேவையில்லாத விஷயம்” என்கிறார் சரத் குமாரின் தாய் சந்தோஷம்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.