திருச்சியில் தொடர் அரிசி கடத்தல் ஈடுபட்டு வந்த நபர் கைது.1400 கிலோ ரேஷன் அரிசி, ஆம்னி வாகனமும் பறிமுதல்.
திருச்சி உறையூரில் தொடர்ந்து கள்ள மார்க்கெட்டில் ரேஷன் அரிசியை கடத்தி விற்று வரும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .
திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில் திருச்சி அலகு காவல் ஆய்வாளர் அரங்கநாதன், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் உணவு பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக திருச்சி உறையூர் தென்னூர் தில்லைநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அப்போது உறையூர் அண்ணாமலை நகரில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி ஆம்னி வாகனத்தில் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்த பகுதியில் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ரவிச்சந்திரன் ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தது தெரிய வந்தது .
இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து அவர் ஆம்னி வாகனத்தில் 28 சாக்கு முட்டையில் கடத்தி வந்த 1400 கிலோ ரேஷன் ரேஷன் அரிசியையும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் .
அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவல் உட்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.