பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும்,
போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வூதியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி சுமூக தீர்வு காண வேண்டும்.
தொழிலாளர்களின் போராட்டத்தில் அடக்கு முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் சனிக்கிழமை இன்று டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணை தலைவர் ராஜு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட துணைத்தலைவர் ஜெயராமன், மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன், எஸ் இடிசி மாநில தலைவர் அருள், சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், தரைக்கடை சங்க மாவட்ட தலைவர் கணேசன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் பழனியாண்டி, மின்துறை பொறியாளர் அமைப்பு மாநில துணைத்தலைவர் இருதயராஜ் ஆகியோர் பேசினர்..
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.