திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்ற ‘
திருச்சி தெற்கு மாவட்ட கூட்டம்.
மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்ட கழக கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் என். கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில், நடைபெற்றது .
கூட்டத்தில் மாநகர செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், கே. என். சேகரன், சபியுல்லா,
மாவட்ட நிர்வாகி கோவிந்தராஜ், செங்குட்டுவன், லீலாவேலு, மூக்கன், குணசேகரன் மற்றும் பகுதி ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர், மாவட்ட /மாநகர அணி அமைப்பாளர்கள் , மாவட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட, மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. பொது தீர்மானம்
1. ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் 40% இலக்கை அடைவதற்கு உறுதுணையாக இருந்த கிளை, வார்டு, வட்ட, பேரூர், நகர, ஒன்றிய, பகுதி, மாநகர கழக செயலாளர்கள், BLA-2, BDA நிர்வாகிகளுக்கு இக்கூட்டத்தில் நன்றி தெரிவித்து மற்றும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றபடுகின்றது.
2.ஆர்.எஸ்.எஸ். மனநிலையுடன் எப்போதும் அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பும் ஆளுநர் அவர்களே …! ஏழை மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை உள்ளவர் போல “நானும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்வதற்காக நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கல்வித்துறையை நோக்கி இப்படி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது. எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது. சாதனையாளர்களை மக்களும் அரசும் கொண்டாடி வருகிறது. கமலாலயத்தின் ASER எனும் போலி அறிக்கையை உயர்த்திப்பிடிக்கும் நீங்கள், அரசுப் பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி “தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?” தமிழக மாணவர்களின் மீது துளியும் கூட அக்கறையில்லாத தமிழக ஆளுநரை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
3.
இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு பதிலாக தேர்தல் ஆணையம் கூறிய விளக்கத்தில் மேலும் சில கேள்விகளை கழக தலைவர் – தமிழக முதல்வர் அவர்கள் எழுப்பியுள்ளார். அக்கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் உரிய விடையை அளிக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
1.வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? எப்படி இத்தனை
2. புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா?
3.தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?
4. வாக்காளராக பதிவு செய்யும் விதிகள் (Registration of Electors Rules)
1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?
SIR) 5. பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் ( மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?
6. கடந்த மே மாதம் 01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?
7. வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது
“நியாயமான தேர்தல்கள் என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் – வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே ? பீகார் மாநிலம் போல தமிழ்நாட்டில் அப்படி ஒரு வாக்காளர் சிறப்பு திருத்தம் நடைபெற்றால், சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் எதிர்த்துப் போராட தி.மு.கழகம் என்றென்றும் தயாராக உள்ளது என்பதை
இக்கூட்டம் தெரிவிப்பதுடன் இதுபோன்ற செயல்களில் ஈடும்படும் ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கின்றது.
* மேற்கண்ட அனைத்து தீர்மானங்களையும் ஏகமனதாக நிறைவேற்றிதருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
5.இரங்கல் தீர்மானம் –
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகன் மு.க.முத்து அவர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 31வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுஜாதா அவர்களின் மறைவிற்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.