ஸ்ரீரங்கத்தில் 18 மாத குழந்தையிடம் தங்க தாயத்தை திருடிய முதியவர் கைது .
திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் மாணிக்க சுந்தரம் (வயது 38) இவரது 18 மாத குழந்தை பவன் குமார். நேற்று வீட்டின் அருகே பவன்குமார் விளையாடிக் கொண்டு இருந்துள்ளது . அப்பொழுது குழந்தை அருகே வந்த ஒரு மர்ம ஆசாமி திடீரென்று பவன் குமார் கழுத்தில் இருந்த ஒரு கிராம் தங்க தாயத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்று உள்ளார்.இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த மர்ம ஆசாமியை பிடித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் அந்த மர்ம ஆசாமியிடம் தொடர்ந்து விசாரணை செய்த போது திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்த முத்து (வயது 60) என்பது தெரிய வந்தது .
இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் காவல் நிலையம் போலீசார் முத்துவை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிராம் தங்க தாயத்தை பறிமுதல் செய்து உள்ளனர்.