சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று திங்கட்கிழமை (11.08.2025) போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜம்புநாதபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவலர் பூபாலன்.அவர்கள் மேற்பார்வையில்
நடைபெற்றது.
உதவி ஆய்வாளர் தனது
சிறப்புரையில் போதைப்பொருள் பயன்பாட்டால் சமுதாயத்தில் நிகழும் சீர்கேடுகள் குறித்து எடுத்துரைத்து அதைத் தடுப்பதில் மாணவர்களின் பங்கு பற்றி சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவர்கள் கவின், தர்ஷன்,டோனி தேவ், சண்முகராஜ் ,மோகன்பாபு, பிரதாப் ஆகியோர் போதை பொருள் விழிப்புணர்வு பாடலைப் பாடினார். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அனைவரும் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா முன்னிலை வகித்து அனைவரையும்
வரவேற்றார். போதைப்பொருள் தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரும் அறிவியல் ஆசிரியருமான பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார்.
உதவி தலைமை ஆசிரியர் சுதீர் நன்றியுரை கூற நிகழ்ச்சியை பள்ளியின் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.