உலகப் புகழ்பெற்ற மலைக்கோட்டைக்கு அவமானம்.
மக்களுக்கு இடையூறாக மது பிரியர்கள்.
அம்மா மக்கள் கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆணைக்கிணங்க,
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி, மலைக்கோட்டை பகுதியில், 13 மற்றும் 14 வது வார்டுகளில்,
மக்களுக்கு கடும் இன்னல்கள் ஏற்படுத்தும் மதுபான கடை மற்றும் நெரிசல் மிக்க சறுக்கு பாறை பகுதியில் மாநகராட்சி ஏற்படுத்தும் வாகன நிறுத்தும் இடம் ஆகியவற்றை கண்டித்து,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக, ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அடுத்த கட்ட போராட்டத்திற்கு பொதுமக்கள் தயாராக உள்ள நிலையில்,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன்
நிர்வாகிகள் கமருதீன், கல்நாயக் சதீஷ்குமார், நாகநாதர் சிவக்குமார், மலைக்கோட்டை சங்கர், நாகூர் மீரான், 13 வட்டச் செயலாளர் மணிகண்டன், 14 வட்ட செயலாளர் சுடலைமுத்து, பாரதி, பூர்ண சந்திரன், அஷ்வின் குமார், கைலாஷ் ராகவேந்திரா,
சுரேஷ்,சிங்காரம், மாரி, முருகேசன், ஆனந்த், ரோஜ் மில்லர், சுதாகர், தமிழா, ஹரி, ராஜேஷ ஆகியோருடன் சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து, மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை செய்தார்கள்.