முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காலை உணவு வழங்கிய திமுக பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் .
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் மு.கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி பிராட்டியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் பொன்னகர் பகுதி திமுக. செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் காலை உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வட்டச் செயலாளர்கள் கவுன்சிலர் ராமதாஸ், பி.ஆர். பால சுப்பிரமணியன், மூவேந்திரன், தனசேகர், மாவட்ட பிரதிநிதி அந்தோணிசாமி, பகுதி அவைத்தலைவர் பவுன்ராஜ், துணை செயலாளர் மோகன், பிரதிநிதி சர்ச்சில், திருப்பதி, சிறுபான்மை பிரிவு நத்தர் அலி, இளைஞர் அணி சார்லி, தேவராஜ், கார்த்தி, பிராட்டியூர் மணிவேல், ஐ.டி. விங் மணிவண்ணன், பிரசாந்த், ரெங்கர். அப்துல் மஜித், எஸ். அழகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.