ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தி வெளியான திரைப்படத்தை திரையிடக்கூடாது என திருச்சி திரையரங்கில் திரண்ட நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு.
ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தி வெளியான திரைப்படத்தை திரையிடக்கூடாது என திருச்சியில் திரையரங்கில் திரண்ட நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு.
திரையரங்க உரிமையாளரிடம் திரைப்படத்தை திரையிடக்கூடாது என வலியுறுத்தி மனு.
கிங்டம் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது.இந்த படம் திருச்சியில் உள்ள சினிமா தியேட்டர்களிலும் வெளியானது .
இந்த படத்தில் ஈழ தமிழர்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்று உள்ளதால், கிங்டம் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடக்கூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் திருச்சியில் கிங்டம் திரைப்படம் வெளியாகிய தியேட்டருக்கு திரண்டு சென்றனர். திருச்சியில் கிங்டம் திரைப்படத்தை திரையிட கூடாது என வலியுறுத்தி அந்த திரைப்படம் வெளியாகி உள்ள திரையரங்க மேலாளரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர். தொடர்ந்து திரைப்படம் திரையிடப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.