திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது . மொத்தம் 60 கிராம் கஞ்சா பறிமுதல்.
திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர்பாத்திமாவிற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது திருச்சி கே.கே. நகர் எல்ஐசி காலனி பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 25) என்ற வாலிபர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் சக்திவேலை கைது செய்து அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று திருச்சி முதலியார் சத்திரம் டீ கடை அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சங்கரன் பிள்ளை ரோடு பகுதியை சேர்ந்த பிராங்கிலின் நிக்சன் ராஜ் (வயது 25) என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளார்.
மேலும் திருச்சி குட்செட் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மேல தேவதானம் பகுதியை சேர்ந்த மதன்குமார் (வயது 24) மதுரை ரோடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 27) ஆகிய இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.