திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தியாகி தீரன்
சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள போக்குவரத்து வளாகத்தில் அமைந்து இருக்கும் தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன் , மாவட்ட துணை செயலாளர விஜயா ஜெயராஜ், பொருளாளர் துரைராஜ், குடமுருட்டி சேகர் , தொமுச அமைப்பாளர் குணசேகர் மற்றும் திமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் , நிர்வாகிகள் மூவேந்தரன் கவிதா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.