Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தையே திக்கு முக்காட வைத்த எஸ்.ஆர்.எம்.யூ கோட்ட பொதுச் செயலாளர் வீரசேகரன் .

0

'- Advertisement -

திருச்சி

கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தையே…..

 

திக்கு முக்குகாட வைத்த திருச்சி எஸ்.ஆர்.எம்.யூ. கோட்டச் செயலாளர்எ ஸ்.வீரசேகரன்

 

இன்று வைகுண்ட ஏகாதசியா என்று கேட்கும் அளவிற்குஎ ஸ்ஆர்.எம்.யூ. தொண்டர்கள் கூட்டம்.

எஸ்.ஆர்.எம்.யூ.பொதுச் செயலாளர் டாக்டர் என்.கண்ணையா புள்ளி வைத்தால் கோலம் போடும்

வல்லமை படைத்த திருச்சி கோட்டச் செயலாளர் வீரசேகரன்

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எம்.எல். அன்பழகன் பணி மாறுதல் வழியனுப்பு விழாவும்

புதியதாக திருச்சி கோட்ட ரயில்வே மேலாளராக பணி ஏற்றுக் கொண்டுள்ள

பாலக்ராம்நெகி அவர்களின் வரவேற்பு விழாவும் இணைந்து நடைபெற்றது.

 

புதியதாக பொறுப்பேற்க கோட்ட ரயில்வே மேலாளர் இன்று பதவி ஏற்கிறார் என்றும், முன்னாள் கோட்ட மேலாளர் நேற்று விடைபெறுகிறார் என்றும்,

நேற்று முன்தினம் இரவு அதிகாரப்பூர்வமாக தகவல்தெரிந்து கோட்டச் செயலாளர் இரவோடு இரவாக திருச்சியை சார்ந்த கிளைகளுக்கு,கோட்ட மேலாளர்களை வரவேற்பு விழாவழி அனுப்பு விழா சிறப்பாக செய்ய வேண்டும் என்று தகவல்களை தெரிவித்ததோடு இல்லாமல்

சீரிய முயற்சியோடு முற்பட்ட கோட்ட செயலாளர் வீரசேகரன்

ஆடி மாதத்தில் அனைத்து மலர்களும் அம்மனுக்கே என்ற விதியை மாற்றி ஸ்ரீங்கத்திலே பெரிய பூமாலை கடையிலே பேசி இரவோடு இரவாக

ரோஜா மலர்களே பார்த்தால் ஏங்கும் வண்ணம்….

பார்த்து பார்த்து ரசித்து ரசித்து அருகாமையில் இருந்து 45 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட இரண்டு மாலையை விடிய விடிய கட்டி எடுத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான

எஸ்.ஆர்.எம்.யூ. தொண்டர்கள் படை சூட

கோட்ட மேலாளர் அலுவலகம் அதிரும் வண்ணம்

எஸ்.ஆர்.எம்.யூ.வாழ்க…

பொதுச் செயலாளர்

கண்ணையா

தலைவர்

ராஜா ஸ்ரீதர்

வாழ்க. ஈஸ்வர்லால் ஜீ வாழ்க….

கோட்டச் செயலாளர் வீரசேகரன் வாழ்க.

DRM வாழ்க…

என விண்ணை பிளக்கும் கோஷங்களோடு

டி.ஆர்.எம் அறைக்குள் ஆயிரம் தொண்டரோடு சென்ற வீரசேகரன்

 

முதலிலே கோட்டத்தை விட்டு செல்ல இருக்கும் DRM.

அன்பழகன் அவர்களுக்கு….

அவரே எதிர்பார்க்காக வண்ணம் அவருடைய பெருமைகளையும் அவருக்கும், எடுத்துரைத்து பிரம்மாண்டமான ஆள் உயர ரோஜா பூ மாலையை அணிவித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

 

அதே போன்று வடக்கில் இருந்து வந்திருக்கின்ற புதிய கோட்ட ரயில்வே மேலாளர் அவர்கள் நமது கூட்டத்தைப் பார்த்தவுடன் ஆச்சரியப்படும் அளவிற்கு இவ்வளவு தொண்டர் கூட்டமா?

என்று கேள்வி எழுப்ப…

அதற்கு நமது கோட்டச் செயலாளர் இது 10 கிளைகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மட்டும் தான்

எங்கள் பொதுச் செயலாளர் ஆணைக்கு இணங்க இன்று தங்களை திருச்சி கோட்டத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்,என்றும் கடந்த காலங்களில் நிர்வாகத்திற்கு நாங்கள் பெருமளவில் ஒத்துழைப்பு கொடுத்தது போல் தங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுப்போம் என்றும்.

வட நாட்டிலே அவர் பார்த்திருக்கா வண்ணம் மிகப்பிரமாண்ட ஆள்உயர ரோஜா பூ மாலை அணிவித்து சால்வை அணிவித்து

வரவேற்றார்.

 

அவர்களோடு

கோட்ட பொறுப்பாளர்கள் ,

அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்கள் மற்றும்

பொன்மலை பகுதி பொறுப்பாளர்கள்,

திருச்சி பகுதியில் சேர்ந்த கிளைச் செயலாளர், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளோடு வரவேற்பு அளிக்கப்பட்டது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.