திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே மது போதையில் டீக்கடையை அடித்து உடைத்த இருவர். கடை உரிமையாளர் மற்றும் பெண் பணியாளர் காயம் .
திருச்சி ஜங்ஷன் அருகே மது போதையில் அராஜகம்.
ரயில்வே ஜங்ஷன் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் உள்ளது அதன் அருகில் இயங்கி வரும் நியூ அலீப் டீ கடையை நடத்தி வருபவர் யாசர் அரஃபத் . நேற்று இரவு அறிமுகம் இல்லாத இரண்டு குண்டர்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் முன்பு மது குடித்துக் கொண்டிருந்தார்கள்.
கட்சி அலுவலகம் முன்பு மது குடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அதற்கு நீ யாரடா இதை சொல்ற என்று தகாத வார்த்தையில் உள்ளனர். அதற்கு
அரஃபத் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் அணி பொறுப்பாளராக உள்ளேன் என்று கூறியுள்ளார். துலுக்கனுக்கு இந்த கட்சியில் என்னடா வேலை என்று கூறி மது அருந்திய இருவரும் டீ கடை’யை அடித்து நெருக்கி உள்ளார்கள். இதில் நியூ அலிஃப் உரிமையாளர் யாசர் அரஃபத் மற்றும் காசாளர் நசீமா ஆகியோர் காயம் அடைந்தனர் . தற்போது திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் அந்த இரு நபர்களையும் பிடித்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர்.
அந்த இருவரும் முக்கிய கட்சியின் நிர்வாகிகள் என்று காவலர்களிடம் திவாகர், சங்கர் என அறிமுகம் செய்து கொண்டனர்.
அவர்கள் மீது இது வரை எந்த வழக்கும் பதியப்படவில்லை என யாசர் அரஃபத் கூறியுள்ளார் .