திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)யில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையம் சார்பாக இளநிலை மூன்றாமாண்டு மற்றும் முதுநிலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் க.அங்கம்மாள் தலைமை தாங்கினார் .
இப்பயிலரங்கில் திருச்சிராப்பள்ளி வருமானவரித்துறை இணை ஆணையர் ஜி.வி. பாண்டியராஜ் ஐ.ஆர்.எஸ்.,அவர்களும்
காமராசர் ஐ.ஏ.எஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர் ஆர்.பிரவின்குமார் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
வேலைவாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ப.கிருஷ்ணன், இணைப் பேராசிரியர், முனைவர் சி.எஸ்.எஸ்.கோபி , உதவிப் பேராசிரியர், முனைவர் அ.நோபல் ஜெயகுமார் உதவிப் பேராசிரியர் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.