திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் புத்தாக்க பயிற்சி நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பாக மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் கே.அங்கம்மாள் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம்.மாணிக்கவாசகம் கலந்து கொண்டு பேசியதாவது:-
ரெட் கிராஸ் அமைப்பானது முதன் முதலில் ஹென்றி டுனாட் என்பவரால் தொடங்கப்பட்டது, சுவிட்சர்லாந்து நாட்டின் செல்வந்தரான இவர் வியாபார விசயமாக இத்தாலி சென்றபோது அந்நாட்டில் நடைபெற்ற சோல்போரினோ போரில் படுகாயம் அடைந்து ஆயிரக்கணக்கானோர் மருத்துவ உதவி இன்றி உயிருக்குப் போராடுவதைக் கண்டு மனம் வருந்தி உயிர்களைக் காப்பதற்காக ஒரு நடுநிலையான அமைப்பை உருவாக்க எண்ணினார்.அதன் விளைவாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைத் தொடங்கினார். இவ்வமைப்பு ஐநா சபையால் 1863 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. அதன்பின் இவ்வமைப்பு உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் உருவாக்கப்பட்டது போர்க் களத்தில் மனிதாபிமான அடிப்படையில் உதவுவது மற்றும் மனிதர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிப்பது, வந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, வரப்போகும் நோய்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவைகளை முக்கிய நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்தியாவிலும் ரெட் கிராஸ் அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியான யூத் ரெட் கிராஸ் அவசர அறுவை சிகிச்சைகளுக்கு ரத்தம் வழங்குவது, முதலுதவி செய்வது, நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் கருத்தரங்குகளையும் நடத்தி கோடிக்கணக்கான மக்களை வருமுன் காக்கும் முயற்சியாக எடுத்துக்கொண்டு விழிப்புணர்களை ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்கள் கூட்டம் நாளைய நலமான வளமான மக்களை உருவாக்குவதில் அளப்பரிய சேவையை செய்து வருகிறது என பேசினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ரெட் கிராஸ் தலைவர் இன்ஜினியர் ஜி. ராஜசேகரன் அவர்களும் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளரும் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் இரா.குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார் .
யூத் கிராஸ் மாணவச் செயலாளர் சௌமியா வரவேற்றார். மாணவர் இ.ரகுராம் நன்றி உரையாற்றினார். மாணவத் தலைவர் ராஜேஸ் நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
நிகழ்வில் 498 முதலாம் ஆண்டு யூத் ரெட் கிராஸ் தன்னார்வல மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.