துவாக்குடி அரசு கலைக் கல்லூரியை இரண்டு சுழற்சி முறையாக மாற்ற வலியுறுத்தி பேருந்துக்களை சிறைபிடித்து போராட்டம் .
கல்லூரியை இரண்டு சுழற்சி முறையாக மாற்ற வலியுறுத்தியும் பேருந்துகள் கூடுதலாக இயக்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் பேருந்தை சிறை பிடித்து போராட்டம்.
துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் கிட்டத்தட்ட 3000 திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் பல்வேறு மாவட்டத்தில் இருந்து விடுதிகளில் தங்கியும் தினமும் வீட்டிற்கு சென்றும் கல்லூரி வருகின்றனர்.
சென்ற பருவ ஆண்டில் கல்லூரி இரண்டு சுழற்சி முறையாக இருந்தது. காலையில் ஆர்ட்ஸ் மாணவர்களுக்கும் மதியம் அறிவியல் மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெற்றது .
திடீரென கல்லூரி நிர்வாகம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரே சுழற்சி முறை என்று நடைமுறைக்கு கொண்டு வந்தது இதனால் 3 ஆயிரம் மாணவர்களும் ஒரே நேரத்தில் கல்லூரிக்கு வரக்கூடிய நிலை இருக்கிறது விடுதியில் இருந்து வரக்கூடிய மாணவர்கள் மீண்டும் கல்லூரி முடித்து இரண்டு மணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது விடுதிக்கு சென்றால் உணவு இருப்பது கிடையாது. இதற்கு முன்னதாக இரண்டு சுழற்சி முறையில் ஒரு மணிக்கு கல்லூரி முடிந்துவிடும் மதியம் வரக்கூடிய மாணவர்கள் விடுதியில் மதிய உணவை முடித்துவிட்டு வருவார்கள் இதனால் உணவு பிரச்சனை எதுவும் ஏற்பட்டது கிடையாது. ஆனால் ஒரே பகுதியாக கல்லூரி செயல்படுவது மாணவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர் என்று குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
எனவே இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சுழற்சிமுறை இரண்டாக மாற்ற வேண்டும் என்றும் கூடுதலாக பேருந்து இயக்க வேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் துவாக்குடி கிளை தலைவர் பிரதீப் குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் வைரவளவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ஜுன் ராஜேஷ் மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன், கிளை நிர்வாகிகள் சத்யா, கீர்த்தனா, சபரி, கருப்பன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
பிறகு காவல்துறை போக்குவரத்து மேலாளர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கூடுதலாக பேருந்து இயக்குவோம் என்று வாக்குறுதி தந்ததை தோழர்கள் அமைதியாக ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர். கல்லூரி முறையை இரண்டு சுழற்ச்சியாக மாற்ற கல்லூரி முதல்வரை சந்தித்து பேச வேண்டும் என்று காவல்துறை கூறியதன் அடிப்படையில் போராட்டம் தற்போதைக்கு முடிவுக்கு வந்து உள்ளது.