திருச்சியில் போலீசார் அதிரடி வேட்டையில்
போதை மாத்திரைகள், விற்ற வாலிபர் அதிரடி கைது
கஞ்சா,போதைப் பொருள்கள், லாட்டரி விற்ற 6 பேர் சிக்கினர்.
திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி, போதை மாத்திரைகள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கோட்டை, காந்தி மார்க்கெட், உறையூர், பொன்மலை, அரியமங்கலம், பாலக்கரை, கண்டோன்மென்ட் ,கே.கே.நகர், எடமலைப்பட்டி புதூர் ஆகிய பகுதிகளில் அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் லாட்டரி விற்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் லாட்டரி விற்றதற்கான ஆவணங்களும் சிக்கின.
இதேபோல் கஞ்சா விற்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.இதே போல் திருச்சி செங்குளம் காலனி சர்க்யூட் ஹவுஸ் பகுதியில் இளைஞர்களுக்கு தீங்கிழைக்கும் போதை மாத்திரைகள் விற்றதாக கல்லுக்குழியைச் சேர்ந்த வாலிபர் கோகுல் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள 100 மில்லி கிராம் எடை கொண்ட 350 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், திருச்சி கே.கே.நகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல். கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்றதாக சுப்ரமணியபுரம் ரஞ்சிதபுரத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் (வயது 71 ) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது பெட்டிக்கடையில் இருந்து 4 1/4 கிலோ மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
எடமலைப்பட்டி புதூர் பகுதியில் சூதாட்டம் ஆடியதாக மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.