24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவையின் தேசிய தலைவர் ஜெகநாத் மிஸ்ரா அரசியலில் ஈடுபட வேண்டும் திருச்சியில் இன்று நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் தீர்மானம்.
24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவையின்
தேசிய தலைவர் ஜெகநாத் மிஸ்ரா அரசியலில் ஈடுபட வேண்டும்
திருச்சியில் நடந்த ஐம்பெரும் விழாவில் நிர்வாகிகள் முடிவு.
24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை சார்பில் உயர் மட்ட ஆட்சி மன்ற தலைமை செயற்குழு, பொதுக்குழு மற்றும் சிறந்த மனித நேயர் விருது பெற்ற தலைவருக்கு பாராட்டு விழா,மாநில அளவில் கல்வி விருது வழங்கும் விழா,சான்றோர்களை கௌரவிக்கும் விழா,மணமாலை விழா ஆகிய ஐம்பெரும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு
தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் பிஎல்ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார்.
விழாவில் மாநிலத் தலைவர் ஆர். எஸ்.தமிழ்ச்செல்வன்,மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணிய தென்னவன்,
மாநில பொருளாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் செட்டியார் இன மக்களின் கல்வி பொருளாதாரம், தொழில் மேம்பாடு குறித்தும், ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி அகாடமி மற்றும் அரசு தேர்வுக்கான வகுப்புகள் நடத்துவதும், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தலும், சமுதாயத்திற்கான அரசியல் உரிமை நிலை நாட்டுவதில் சம்பந்தமாகவும், பொருளாதாரத்தில் நலிவுற்ற உறவுகளுக்கு வியாபாரம் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வது சம்பந்தமாகவும் மற்றும் பல தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணிய தென்னவன்,
மாநில பொருளாளர் ராஜசேகரன்ஆகியோர் முன்னிலை வைத்தனர்.விழாவில் மாநில இளைஞரணி தலைவர் எம்எஸ் மணி, மாவட்டத் தலைவர் ஆர். சிவக்குமார், மாவட்ட செயலாளர் டைமன் ராஜா,
மாவட்ட பொருளாளர் நெய் ராஜா, மற்றும் மாநில
மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் தேசிய செட்டியார் பேரவை தேசியத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கூறி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அனைவரும் ஜெகநாத் மிஸ்ரா அரசியலில் வரவேண்டும் என்று வாக்களித்தனர்.விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.